தலைமுடி பிரச்சனைக்கு இதோ தீர்வு..!
தலையில் வரும் நரைமுடி பிரச்சனையை சரிசெய்ய ஒரு கிண்ணத்தில் நெல்லிக்காய்த்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முடியின் வேர்க்கால்களில் தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து பின் தலைக்கு குளித்து வரலாம்.
தலைமுடி வலுபெற்று நீண்டு கருமையாக வளர பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடியில் தேய்த்து ஊறவைத்து தலைமுடியை அலசலாம்.
தலைமுடி பொடுகு மறைய ஒரு கப் மரிக்கொழுந்து, அரை கப் வெந்தயக்கீரை ஆகியவற்றை அரைத்து தலைக்கு பேக் போட்டு 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கலாம்.
தலைமுடியில் சிக்கு உண்டாகாமல் இருக்க ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் பால், எலுமிச்சை சாறு 3 ஸ்பூன் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி மசாஜ் செய்து பின் அப்படியே 45 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின் தலைக்கு குளித்து விடலாம்.
வறண்ட தலைமுடி உடையவர்கள் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு பின் இந்தகலவையை தலையில் தடவி மசாஜ் செய்து ஊறவைத்து தலைமுடியை அலசலாம்.
