சென்னயில் இப்படி ஒரு கோவில் திருவிழாவா..? கோலாகலமாக நடைபெற்று முடிந்த அழகு முத்து மாரியம்மன் கோவில் திருவிழா..!
சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாநகரில் உள்ள அழகு முத்து மாரியம்மன் கோவில் 57ம் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்கியது.
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மாலை 4மணிக்கு மேல் அம்மன் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருவிழா தொடங்கிய முதல் நாளே.., காளி அம்மன் ஆட்டம், சிவன் பக்தரின் அடியார்களாக இருக்கும் சிறுவர்களின் இசை.., கேரளா மேளம் மற்றும் சிலம்பாட்டம் .., குதிரை படையோடு, மேளம் தாளம் முழங்க.., வேட்டு சத்தத்துடன் அழகு முத்து மாரியம்மன்.., தெருக்களில் வீதி உலா வந்து மக்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் அம்மனுக்கு தீப ஆராதனை செய்து.., சிவனின் அடியார் சிறுவ பக்தர்களுக்கும்.., உடன் வந்த மற்ற பக்தர்களுக்கும்.., இனிப்பு மற்றும் குளிர் பானங்கள் வழங்கியுள்ளனர்.
திருவிழா தொடங்கிய நாளில் இருந்து.., தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. அம்மன் வீதி உலா முடித்து விட்டு கோவிலுக்குள் சென்றவுடன்.., காப்புகட்டி விழாவை தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி செவ்வாய் கிழமை இரவு மகளிர் குழு சார்பாக விளக்கு பூஜை சீரும் சிறப்புமாக நடைபெற்றுள்ளது. 300க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டு விளக்கு பூஜை எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 11ம் தேதி மாலை 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், முளைப்பாறி, வேல் குத்தி, தீச்சட்டி, மற்றும் அக்கினி கவசம் ஏந்தி, தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
பின் இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும்.., பிரசாதம் வழங்கப்படுள்ளது. இந்த ஒரு நாள் மட்டுமின்றி விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் அன்னதானம் வழங்கப்படுள்ளது.
நேற்று மதியம் 12 மணியளவில்.., அம்மன் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும்.., அன்று இரவு கரகாட்டம்.., மயிலாட்டாட்டம் மற்றும் வான வேடிக்கையுடன் அம்மன் இரவு வீதிவுலா வந்து மக்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று காலை கும்பம் கலைக்கப்பட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றுள்ளது.
அது மட்டுமின்றி மக்களின் பொழுது போக்கிற்காக ராட்டினம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அசுரத்தலாட்டு.., ரங்க ராட்டினம், குழந்தைகளுக்காக சிறு சிறு ராட்டினங்கள் என சிட்டியில் இப்படி ஒரு திருவிழாவா என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வருடந்தோறும் இங்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..