தல தோனி 43வது பிறந்தநாள்..! தோனி சொன்ன வெற்றியின் ரகசியம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் போட்டியின் ஆட்ட நாயகனும் ஆன “தல தோனி-யின் 43வது பிறந்தநாள்… இன்று அவர் தனது பிறந்தநாளை மனைவி சாக்ஷியுடன் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்.
மகேந்திர சிங் தோனிக்கு மட்டும் ஏன் இத்தனை புகழ்.., அனைவரின் அன்பு பெற்றது எப்படி.? இன்றைய சூழலில் ஒரு பெரிய திரை நட்சத்திரத்திற்கு கூட இத்தனை வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
ஆனால் தோனி. நின்றால், நடந்தால், திரும்பினால் என்று அத்தனையும் செய்தியாகிறது. சமூக வலைதளம் அலறுகிறது. அவர் ஐந்து பந்துகள் ஆடினாலும் அது தேசிய அளவில் டிரெண்ட் ஆகிறது. சச்சின் புகழ் உச்சத்தில் இருந்தபோது இது போல இன்னொரு வீரருக்கு புகழ் கிடைக்குமா..? என்ற கேள்வி எழுந்ததுண்டு. அதையெல்லாம் தோனி எப்போதோ கடந்து விட்டார்.
நாம் ஒரு விஷயத்தை செய்ய முயற்சிக்கும் போது அது தோல்வி கொடுத்து விட்டால், அதில் இருந்து நாம் பாதிலேயே பின் வாங்கி விடுகிறோம் ஆனால் தோனி அப்படி அல்ல.. அவர் சொன்ன வார்த்தை “ஒரு மனிதனின் வாழ்கைக்கு வெற்றி தோல்வி முக்கியம் என்பதை விட நாம் செய்யும் செயலை எப்போதும் நேர்மையாக செய்தாலே போதும்..” அதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் வெற்றியே நம்மை தேடி வரும்… என்றார்…
புகழின் உச்சிக்கு சென்றாலும் அதை வெளிப்படுத்திக்கொள்ளாமல்… அனைவரிடமும் எப்போதும் போல இயல்பாக இருக்கும் “தல தோனி” அவர்களுக்கு மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..