மாணவர்களின் உயிருடன் மத்திய அரசு..! ஈஸ்வரன் பரபரப்பு பேட்டி..!
கோவை ரயில் நிலையம் பகுதியி்ல் உள்ள தனியார் உணவகத்தில் இன்று நீட் தேர்வு குறித்து செய்தியாளர்களை சந்நித்து பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறும் பொழுது..
கடந்த 2016 ம் ஆண்டு மத்திய அரசு இந்தியா முழுவதும் நீட்தேர்வை அறிமுகம் செய்தது இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவ படிப்புகளை படிக்க நீட் தேர்வு அவசியம் என்று அறிவித்தது.
இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. நெஷனல்டெஸ்டிங் ஏஜன்சி என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட்தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.
இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. முன்னதாக மருத்துவப்படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட்தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் மனநிலையை, இந்த தேர்வு மாற்றி மாணவர்களின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2016ம் ஆண்டு மதுக்கரை அரசு பள்ளி முன்பாக கையேழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தொடங்கி மாணவர்களுக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்து உள்ளதாகவும், நீட் தேர்வு வருவதற்க்கு முன்னர், ஸ்டேட்போர்டில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து வந்தனர்.
ஆனால் நீட் வந்த பின்னர் ஸ்டேட்போர்டு மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி அடையாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ பிரிவில் பாடங்களை படிக்கும் மாணவர்கள் மட்டுமே நீட்தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி வருகின்து.
இது மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 2017 வரை நீட் தேர்வு வருவவதற்க்கு முன்னர் சிபிஎஸ்இ மாணவர்கள் ஒருவர் கூட நீட்தேர்வுக்கு தகுதி அடையாத நிலை இருந்தது. ஆனால் நீட் தேர்வு வந்த பின்னர் 2017ல் சிபிஎஸ்இ பிரிவில் 957 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த ஆண்டு 2023ல் சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் 1617 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவ்வாறான சூல்நிலையை இந்த நீட் தேர்வு ஏற்படுத்தி வருகின்றது. நீட் தேர்வு பயிற்சி மையமான கோட்டா பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
24 மாணவர்கள் உயிர் இழந்த பயிற்சி மையத்திற்கு மோடி சென்று பார்க்கவில்லை. இது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை மோடி உணர வேண்டும். எனவே நீட் தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கும் தேர்வாக மாறி வருகின்றது.
இது இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் உயிரை பறிக்கும் ஒரு தேர்வாக மாறி வருகின்றது. இதனை தடுத்து மாணவர்களின் வாழ்க்கையை காக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் போராடி வருகின்றதாக கூறினார்.
இந்த செய்தியாளர்கள்சந்திப்பின் பொழுது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் அமைப்பு செயலாளர் செல்வராஜ், தலைமை நிலைய செயலாளர் ராஜ், துணை செயலாளர்கள் கந்தசாமி, சம்பத், பொண்ணுகுட்டி ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..