“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!
தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் மணிரத்னம். இவரின் படத்தில் நடிக்கும் அனைத்து கதா நாயகன்களும் சிறந்த நடிகர் என்ற விருதை வாங்கிவிடுவார், இவரின் தயாரிப்பில் வெளிவரும் படத்தில் உள்ள காட்சிகள்.., நீங்க இடம் பிடித்திருக்கும்.
இப்படி அனைவர் மனதையும் கவரும் இயக்குனர் “மணிரத்னத்தின்” பிறந்தநாள் இன்று. 1956ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி மதுரையில் பிறந்த இவர், சினிமா திரைஉலகில் இன்று உயர்ந்துள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு #maniRatnam ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இவரின் மறக்க முடியா படங்களான :
மெளனராகம், அலைபாயுதே, பம்பாய், உயிரே, மற்றும் ஓகே கண்மணி போன்ற படங்களில் எல்லோர் மனதிலும் அழகான காதலை பதித்திருப்பார். என்றும் மறக்காத திரைப்படங்களாக தளபதி, நாயகன், ராவணன், அக்கினி நட்சத்திரம், திருடா திருடா போன்ற படங்களில் காதலும், ஆக்ஷனும் கலந்த படமாக தயாரித்து இருப்பார்.
மெட்ராஸ் டாக்கீஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார். பின் லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்தார். தற்போது இவருக்கு 100 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. இவரின் வளர்ச்சியை கண்டு பல இளஞர்கள் இவரை முன்னோடியாக (Inspiration ) வைத்துள்ளனர்.
அவரது பிறந்தநாளையொட்டி அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா துறையினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்… அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் அவர்..,
தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்… இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன். என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
திரைப்படங்கள் மூலம் நம்மை ரசிக்க வைத்த “மணிரத்னம்” அவர்களுக்கு மதிமுகம் குடும்பத்தினர் சார்பாவாகவும் ரசிகர்கள் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள.., இவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.