முட்டை வாங்கும் முன் இதை டெஸ்ட் பண்ணி வாங்குங்க..!!
நமது ஊரில் அசைவ உணவு சாப்பிடாதவர்களும் கூட முட்டையை எடுத்துக் கொள்வார்கள். முட்டையில் இருக்கும் சத்துகளே இதற்குக் காரணமாகும்.
முட்டை நல்லது தான்
ஆனால் கெட்டுப் போன முட்டையைச் சாப்பிட்டால் அது விஷமானதாக மாறுமாம்.
கெட்ட போன முட்டையைச் எப்படி கண்டு பிடிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்லாம் வாங்க…
முதலில் எப்படி ஏன் கெட்டு போகுது…?
முட்டை உள்ளே இருக்கும் மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் சிதைவதாலேயே முட்டை கெட்டுப் போகிறது. இதற்கு உள்ளே நடக்கும் ரசாயன மாற்றங்களே காரணமாகும்.
அதாவது முட்டைக்குள் கார்போனிக் ஆசிட் என்பது இருக்கும். அது நாட்கள் செல்ல செல்ல கார்பன்டை ஆக்ஸைடாக மாறும். இது முட்டைக்குள் ஏர் பாக்கெட்களை (காற்று பாக்கெட்) உருவாக்கும். முட்டை நீரில் மிதக்க இதுவே காரணம்.
முட்டை கெட்டுப் போய்விட்டதைக் கண்டறிய இதுவும் ஒரு முக்கிய வழி.
அதாவது ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் முட்டையைப் போடுங்கள் நல்ல நிலையில் இருக்கும் முட்டை மெல்ல உள்ளே போய்விடும். அதேநேரம் கெட்டுப்போன முட்டையில் கார்பன்டை ஆக்ஸைட் இருப்பதால் அது நீரில் மூழ்காது. அதை வைத்தே கெட்டுப் போன முட்டை என்பதைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
அதேபோல முட்டை ஓட்டை வைத்தே கூட நம்ம கண்டுபிடிகாலாம்…
முதலில் முட்டையில் எந்தவொரு விரிசலும் இருக்கக்கூடாது. விரில் இருந்தால் அதன் வழியாக நோய்க்கிருமிகள் உள்ளே புகுந்து, முட்டை கெட்டுப் போக வைத்து இருக்கும்.
மேலும் நீங்கள் முட்டையைக் குலுக்கி பார்த்தும் கூட அது கெட்டுப் போய் விட்டதா இல்லையா என்பதைக் கண்டறியலாம், காதுக்கு அருகே வைத்துக் குலுக்கி பாருங்கள். அதில் இருந்து சத்தம் வரவில்லை என்றால் நல்ல முட்டை என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் சத்தம் வந்தால் கெட்டுப் போய் இருக்க வாய்ப்பு அதிகம்.
இந்த டிப்ஸ்களை பாலோ செய்து முட்டைய வாங்குங்கள்.
கவிப்பிரியா