கை, கால் நகங்களில் பூஞ்சை தொற்று வந்தால் எப்படி கண்டு பிடிப்பது எப்படி…?
கை, கால் நகங்களில் பூஞ்சை தொற்று வந்தால் எப்படி கண்டுபிடிப்பது?
கால் நக பூஞ்சை என்பது உங்கள் கால் நகங்களைப் பாதிக்கும் ஒரு பரவலான பூஞ்சை தொற்று
பொதுவாக கால் நகங்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படுவது பொதுவானது தான் என்றாலும் மழைக்காலங்களில் 20 சதவீத மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
உங்களின் கால் விரல் நகங்களில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டும் அறிகுறிகள் என்னென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
• கால் விரல் நகங்களில் நிற மாற்றம்
• பூஞ்சைத் தொற்று ஏற்பட்ட விரல் மற்றும் நகம் தடித்துப் போவது
• நகம் உடைதல்
• நகம் உள்ளுக்குள் நொறுங்கி வலி எடுப்பது
• விரல் நகங்களில் சொத்தை
• கால் விரல் சருமம் சிவந்து போதல்
நகங்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படக் காரணம் என்ன
கால் விரல் நகங்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியது ஆகும். மற்ற தொற்றுகளைப் போலவே நகப் பூஞ்சையும் இருக்கக்கூடாத இடத்தில் வாழும் சிறிய நுண்ணிய உயிரினங்களால் ஏற்படும் பூஞ்சைத் தொற்றாகும்.
கால் விரல் நகங்களில் பூஞ்சைத் தொற்றுக் கிருமிகள் கால் விரல் நகங்களைச் சுற்றியும், அதற்கு கீழ் உள்ள தசைகளின் இடுக்குகளில் இருக்கும் இறந்த சரும செல்களின் அடுக்கில் இருக்கக்கூடும்.
இதுபோன்ற பூஞ்சைகள் எல்லோரும் பயன்படுத்தும் சமூக நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சூடான மற்றும் ஈரமான இடங்களில் செழித்து வளரும்.
கால் விரல் நகங்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படும் அபாயம் யாருக்கெல்லாம் உள்ளது என்று பார்கலாம் வாங்க;
கால் விரல் நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று யாருக்கு வேண்டுமானாலும் உருவாகலாம்.
ஆனாலும், சிலருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும். அவர்கள் யார் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.
• வயதானவர்கள் அதாவது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்
• நீரிழிவு நோய் உள்ளவர்கள்
• பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள்
• தடிப்பு தோல் அழற்சி உள்ளவர்கள்
• ஹைப்பர் ஹைட்ரோசிஸ் ( அதிகமாக வியர்த்தல் ) பிரச்சனை உள்ளவர்கள்
• வியர்வை நிறைந்த காலணிகளை எப்போதும் அணிந்து கொண்டே இருப்பவர்கள்
கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..