தேய்பிறை அஷ்டமி வழிபாடு..!! கடன் பிரச்சனை தீர இதை செய்ய மறக்காதீங்க..!!
தேய்பிறை நாளில் கால பைரவரை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் மட்டுமின்றி இந்த பிரச்சனைகளும் தீர்ந்து விடும்…
சிவன் கோவில்களில் கால தெய்வமாக இருக்கும் கால பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட வேண்டும்.. பல கோவில்களில் பைரவருக்கு என்று தனிக் கோவில்கள் உண்டு.
தேய்பிறை அஷ்டமி நாளில் மட்டுமின்றி, ஞாயிறு ராகு காலத்திலும் வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்..
இன்றைய தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்..
* அதாவது எதிரிகள் பயம் நீங்கும்,
* மனக்குழப்பங்கள் நீங்கும்,
* கடன் பிரச்சனைகள் குறையும்,
* தொழிலில் லாபம் அதிகரிக்கும்,
* கண் திருஷ்டி தோஷம் நீங்கும்.
பைரவருக்கு இன்றைய நாளில் வில்வம், செம்பருத்தி, தவிர மற்ற மலர்கள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்யலாம்..
அதேபோல் சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.. அல்லது மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..