நீரிழிவு நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கர்ப்பகாலத்தில் இதை தவிர்த்திடுங்கள்..!!
கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயின் ஆபத்து நாளுக்கு நாள் உலகமெங்கும் அதிகரித்து கொண்டே வருகிறது. கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிதை மாற்றத்தால், கர்ப்பிணி பெண்களின் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
கர்ப்பிணி பெண்களின் நீரிழிவு நோய் கடந்த 2011 – 2013 ஆண்டு வரை மட்டும் 4.5% சதவிகிதம் இருந்தது. 2020 ம் ஆண்டில் 7.8% ஆக உயர்ந்துள்ளது.
கர்பக்கால நிரிழிவால் பல மகப்பேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. குழந்தைகள் வளர்ச்சி அடையும் பொழுது உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
இதனை குறித்து பல ஆய்வுகளை அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழகம் நடத்தியது. அதில் பெண்கள் தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன் வெளிச்சத்தை பார்க்காமல் இருந்தால் நீரிழவு அபாயத்தை குறைக்க முடியும் என ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
அதாவது கணினி, ஸ்மார்ட் போன், எல்.இ.டி விளக்கு இவற்றை அதிகம் பயன் படுத்திய கர்ப்பிணி பெண்கள், பயன் படுத்தாத கர்ப்பிணி பெண்கள் என இவர்கள் இருவருக்கும் இடையே சோதனை செய்தோம். அதில், அதிகம் வெளிச்சத்தை பார்த்த பெண்களுக்கே நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது.
இவற்றின் பயன்பாட்டை முடிந்த வரை கர்ப்பிணி பெண்கள் தவிர்த்து கொண்டால்.., நிரிழிவில் இருந்து பாதுகாக்க படுவார்கள் என நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ” மின்ஜி கிம் ” கூறினார்.
-வெ.லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..