தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட தமிழச்சி தங்க பாண்டியன்..!!
வருகிற பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில்.., பல்வேறு கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிக்கும் வகையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில், திமுக சார்பில் தென் சென்னை மக்களவை தொகுதியின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை பள்ளிக்கரணை உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்தும், உயர மாலை அணிவித்தும், கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்தும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதேபோல், தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம் :
அப்போது அதில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜகாவல் எந்த நல்லதும் நடக்கவில்லை. நடந்த நல்லது எல்லாம் பாஜக கூட்டத்திற்கு மட்டுமே. தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் தத்தளித்த போது எட்டிக்கூட பார்க்காத மோடி இப்போ ஊர் ஊராக சென்று பிரச்சாராம் செய்கிறார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து எவ்வளவு நலத்திட்டங்களை செய்துள்ளது என உங்களுக்கு தெரியும். எனவே வாக்களிக்கும் பொழுது உங்களின் தலைவர் யார் என தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
கோயம்பேடு பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், நடைபாதையில் உள்ள கடையில் கட்சிக்காரர்களுடன் வடை வாங்கி சாப்பிட்டார். பின்னர் வடைக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தினார். அதேபோல், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் :
இந்நிலையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வைகை ஆற்றில் மலர் தூவி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் வாக்காளர்களிடம் பேசிய அவர், “காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்தால், எலும்பு முறிந்துள்ளது. இதனால் என்னால் எழுந்து நிற்கவோ, கீழே இறங்கி வந்து மரியாதை பெற்றுக் கொள்ளவோ முடியவில்லை. அதனால் உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”. என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..