பம்பரம் சின்னம் கிடைக்காததால் எந்த பின்னடைவும் இல்லை..!! துரை வைகோ பேட்டி..!!
மக்களவைத் தேர்தலில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான விசாரனையில், மக்களவைத் தேர்தலில், மதிமுகவுக்கு பம்பர சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, சின்னம் கிடைக்காததால் எந்த பின்னடைவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மறுக்கப்பட்ட பம்பர சின்னம் காரணம் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
பிரசாரம் காரணமாக மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவிற்க்கு திருச்சி மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருவதாக தெரிவித்தார்.
பாஜக கூட்டணிக் கட்சிகள் கேட்கும் சின்னத்தை கொடுக்கும் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளிடம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..