பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது..!!
ஆற்காடு பகுதியில் பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் அடுத்த காட்பாடி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் ஆற்காடு பகுதியில் பள்ளியின் அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பள்ளியில் படித்து கொண்டிருந்த 16 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
ஒரு நாள் வெளியே சென்று விட்டு வரலாம் என்று மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அதை வீடியோவாகவும் மொபைலில் பதிவிட்டுள்ளார். இதை பற்றி வெளியே சொன்னால், வீடியோவை இணையதளத்தில் விட்டு விடுவேன் என்று சொல்லி மிரட்டியுள்ளார்.

அதற்கு பயந்த அந்த சிறுமி அதை பற்றி வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். பின் அந்த வீடியோ காட்டி மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நாளடைவில் சிறுமிக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, சிறுமியின் பெற்றோர். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அதில் சிறுமி கர்ப்பம் என தெரிய வந்தது. இது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். சிறுமியும் நடந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளார். பின் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இது பற்றி புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிறகு வேலூர் மாவட்டம் போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கலைப்பொன்னியிடம் விசாரணைக்கு வந்ததை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய அப்பு என்கின்ற மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
சிறை தண்டனை ஏற்க மறுத்தால், தண்டனை கடுமையாக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். எனவே அதற்கு பயந்து மணிகண்டன் நேற்று சிறை தண்டனையை ஏற்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டு.., உடல்நலம் தேற்ற திர்காகவும் வழி செய்துள்ளார்.
பாதிகப்பட்ட மாணவி நலனை கருத்தில் கொண்டு இந்த தவறு செய்த நபருக்கு சரியான தண்டனையை உடனே கொடுத்த நீதிபதியை பலரும் பாராட்டி வருகின்றனர்
Discussion about this post