கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை..!! அடுத்து எந்த மாவட்டங்களில் தெரியுமா..?
தமிழ்நாட்டில் தற்போது கனமழை சில நாட்களுக்கு முன் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து ஓய்ந்தது.., இன்றும் ஒரு சில இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் மக்களை வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம்.., தற்போது இல்லாமல் இருக்கிறது.
இந்த சமையத்தில் மழை பெய்து இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் சொல்கின்றார்கள். தற்போது தமிழகத்தில் மழை பெய்ததை போலவே.., கேரளாவிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
கேராளாவில் தற்போது மழைக்காலம் என்றும் சொல்லலாம். கேரளாவில் தற்போது அதிக கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் எப்படி உள்ளது, மழைக்காலம் எப்படி எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என, தமிழ்நாடு வானிலை வெதர் மேன் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்றும் வானம் மேக மூட்டத்துடன் உள்ளது. வங்கக்கடலின் மேலே எழும்பியுள்ள வளிமண்டல புயல் சுழற்சி காரணமாக இரவு நேரங்களில் கூட இடியுடன் கூடிய கனமழை தமிழ்நாட்டில் பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதைபோல் மேற்கு மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் “பிரதீப் ஜான்” கூறியது கேரளா, வால்பாறை, மற்றும் கர்நாடகா கடலோர பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்து வருகிறது, அந்த பகுதியில் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறினார்.
நீலகிரியில் உள்ள அவலாஞ்சி பகுதியில் 184 கிமீ மழை பெய்து உள்ளது, வால்பாறையில் உள்ள சின்னக்கல்லாறு பகுதியில் 147 மி.மீ மழை பதிவாகி உள்ளது, பெரியாறு நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் அதிக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு பயனங்கள் செல்வதை தவிர்க்கலாம். என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீலகிரி, கோவை , தென்காசி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும். திருப்பூர், தேனீ, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..,
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், இன்னும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை ஆனால் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், புறநகர் பகுதியில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Discussion about this post