நினைத்ததை நிறைவேற்றும் சூரிய பகவான் வழிபாடு..!! இதை செய்ய மறக்காதீங்க..!!
உலகில் உள்ள ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உண்டு.., அந்த வழிபாட்டு நாளில் இதை செய்தால் நமக்கு இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.. அந்த வகையில் இன்றைய நாளில் உலகிற்கே ஒளி தரும் சூரிய பகவான் வழிபாடு பற்றி பார்க்கலாம்..
சூரிய பகவான் வழிபாடு :
இன்றைய நாளில் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபட்டால் எதிரிகள் தொல்லையில் இருந்து விலகி சந்தோசமாக வாழ சூரிய பகவானை வழிபட்டாடு செய்யலாம்..
அதுமட்டுமின்றி செல்வம் அதிகரிக்கவும்., எதிர்மறை ஆற்றல் விலக சூரிய பகவானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்..
ஞாயிற்று கிழமை தோறும் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து வழிப்பட்டால் தடைபட்ட காரியங்கள் விலகும்.. அதேபோல் எந்த ஒரு செயல் செய்தாலும் தடை என்ற சொல்லுக்கே இடம் இல்லை..
சூரிய பகவான் விரதம் :
சூரிய விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே அதாவது சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து பிரம்ம முகூர்ததிற்குள் குளிக்க வேண்டும்..
சூரியன் உதிக்கும் திசையை நோக்கி., அதன் பின்னர் தாம்புல தட்டில் பச்சரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், மற்றும் பழங்கள் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்..
அதன் பின்னர் பஞ்சபாத்திரத்தில் தண்ணீர் காண்பித்து சூரியபகவான் முன் ஊற்ற வேண்டும்.. அதன் பின்னர்.. சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, அந்த அர்ச்சனைத் தட்டின் மீது தீர்த்தம் போல தெளிக்க வேண்டும்.
பூஜைகள் முடிந்த பின் விரதம் இருப்பவர்கள்.. இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் அதாவது., வெள்ளம் சேர்க்கப்பட்ட உணவு பொருளாக மட்டுமே இருக்க வேண்டும்..
குறிப்பாக விரதம் தொடங்கிய பின் மாலை 6 மணி வரை எந்த வகையான உணவும்., எடுத்துக்கொள்ள கூடாது.
தண்ணீர் மற்றும் பால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.. பழம் வகையோ அல்லது உணவோ எடுத்துக்கொள்ள கூடாது..
காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்துவிட்டு, மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக, சாப்பிட்டு விட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் விரதம் முடிந்த பின் கூட அசைவம் வகையான உணவுகள் எடுத்துக்கொள்ள கூடாது..
கிடைக்கும் பலன்கள் :
* தொடர்ந்து சூரிய விரதம் இருந்தால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் நீடிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீக உண்மை..
* இதனால் முகத்தில் ஒரு வசீகர தோற்றம் உண்டாகும்.
* சமூகத்தில் பிறர் மதிக்கின்ற அளவிற்கு வளர்ச்சி கிடைக்கும்… அதாவது பொன் வரவு., பண வரவு., வசதிகள் அதிகரிப்பு.. என அனைத்தும் கிடைக்கும்..
* மற்றும் துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீகம், எதிர்மறை சக்திகள் ஏதும் நெருங்காது..
* எதிரிகளால் ஏற்படும் பிரச்சனை., உறவினர்களால் ஏற்படும் பிரச்சனை என எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்..
* மற்றும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.
மற்ற நாட்களை வழிபாடு செய்வதை விட மற்ற தெய்வங்களுக்கு விரதம் இருப்பதை போல சூரிய பகவானுக்கு விரதம் இருப்பது எளிதல்ல..
ஆனால் அந்த அனைத்து தடைகளையும் மீறி விரதம் இருந்து சூரிய பகவானுக்கு வழிபாடு செய்து அவரிடம் சரண் அடைந்தாள். சூரியபகவான் நம் வாழ்க்கையை பிரகாசம் ஆக்குவதோடு உங்கள் வளர்ச்சியையும் அவர் மேம்படுத்துவர். என்பது ஐதீ க உண்மை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..