மணிப்பூர் டிஜிபி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் இருந்தே கடுமையான வன்முறை தொடர்ந்து வருகிறது.., வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவ வீரர்களும் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வன்முறையும் அதிகரித்துள்ளது.., மணிப்பூர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோவாக வெளியானது.., இந்த சம்பவம் பலரின் மனதையும் உலுக்கியது. இதுகுறித்து விசாரணை நேற்று உச்சநீதி மன்றத்தில் மணிப்பூர் அரசிற்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தனர்.
நேற்று நடந்த விசாரணையில் உச்சநீதி மன்றத்தில் பல கேள்விகள் எழுப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.., மணிப்பூரில் இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளது, ஆனால் அதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை.., மணிப்பூரில் நடக்கும் கலவரங்களை பார்த்துக்கொண்டு அரசு அமைதியாக இருக்கிறது.
இந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் இந்த கொடூரங்களை பார்த்து மணிப்பூர் அரசு அலட்சியாமாக உள்ளது, இவர்களின் சட்ட ஒழுங்கில் நம்பிக்கை இல்லை, எனவே மணிப்பூர் டிஜிபி விரைவில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி மதியம் 2மணிக்கு இந்த அமர்வு கூடும் அன்று கட்டாயம் மணிப்பூர் டிஜிபி ஆஜராகி இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post