வெளிநாட்டிற்கு சென்ற தளபதி..!! புஸ்ஸி ஆனந்தின் திடீர் மீட்டிங்..!!
நடிகர் விஜய் அரசியலில் கால் பாதிக்க இருப்பதால்.., விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூரில் ஆலோசனை மேற்கொண்ட நடிகர் விஜய் மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார்.
தற்போது விஜய் வெளிநாட்டில் இருந்த நிலையில்.., விஜய் மக்கள் இயக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதி புதிதாக தொடங்க உள்ள விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் முதல் முறையாக வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள போவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் சட்ட ரீதியான பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிகப்படும் எனும்.., தமிழகம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கால் ஆகஸ்ட் 5ம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் எனவும் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
Discussion about this post