ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கா்னலாக பதவி உயா்வு வழங்க மறுக்கும் ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் ஓய்வு பெறும் 60 வயது வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து பெற்ற பெண் அதிகாரிகள், ராணுவத்தின் தோ்வு நடைமுறைகளில் கா்னல் பதவிக்கு பதவி உயா்வு பெறாதது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் அடங்கிய அமா்வுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பணியில் முறையான பதவி உயா்வு பெற போராடும் பெண் அதிகாரிகளுக்கு நீதியை வழங்க வேண்டிய அவசியத்தை ராணுவத்தின் இந்த அணுகுமுறை மீறியுள்ளதாகவும், பெண் அதிகாரிகளுக்கு இடமளிக்க போதிய எண்ணிக்கையிலான காலியிடங்கள் இல்லை எனும் ராணுவத்தின் வாதத்தை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தனர்.
தீா்ப்பு வெளியான 15 நாள்களுக்குள் பெண் அதிகாரிகளுக்கு “கா்னல்” பதவி உயா்வு வழங்குதற்கு சிறப்பு தோ்வு வாரியத்தைக் கூட்ட வேண்டும் என்றும், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கட்-ஆஃப் கணக்கிட வேண்டும் என பரிந்துரைத்து உத்தரவிட்டனா்.
Discussion about this post