நேபாளத்தில் நேர்ந்த சோகம்..!! பிரதமர் மோடியின் திடீர் அறிக்கை..!!
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நேற்று ரிக்டர் 6.4 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நேபாள மக்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..