மணல் கடத்தல் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! பரபரப்பில் வேலூர்..!!
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க வந்த தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
குடியாத்தம் அடுத்த சின்ன தொட்டலாம் கிராமத்தில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக மேல்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மணவாளன் என்பவர் வந்த ரகசிய தகவலின் பெயரில் இரவு அந்த கிராமத்தில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது வினித் மற்றும் ராஜசேகர் என்பவர் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தபோது தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த இருவரும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கி அவர் மீது மாட்டு வண்டியை விட்டு ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த இருவரும் கிராமத்தில் காவல்துறையினர் குவிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். மணல் கடத்தலை தடுக்க வந்த தனிப்பிரிவு சிறப்ப உதவி ஆய்வாளரை தாக்கப்பட்டதாகவும் அவரை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் போலீசார் கிராமத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..