நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வர உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் லால் சலாம் படத்தில் இஸ்லாமியர் கெட்டப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். கெஸ்ட் ரோல் என்பதால் சீக்கிரம் ஷூட்டிங்கை முடித்துவிடலாம் என ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். ஆனால் அங்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த சொதப்பல்களால் வெறும் 3 நாட்கள் மட்டுமே நடித்துள்ளார். மீதமிருந்த நாட்களில் வெறுமனே ஓட்டலில் தங்கியிருந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற நபரின் தேதி கிடைக்காதா? என முன்னணி இயக்குநர்களே தவம் கிடக்க, மகள் தனது கால்ஷீட்டை வீணடித்தது ரஜினியை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளதாம்.