லீவு கேட்ட சப் இன்ஸ்பெக்ட்ர்..! உயர் அதிகாரி வைத்த டிமெண்ட்..! பகிர் ஆடியோ..!
புதுச்சேரி ஐஆர்பி பட்டாலியனில் உதவி சப் இன்ஸ்பெக்டர் – ஆக இருப்பவர் சந்திரன்.., நேர்மையான அதிகாரியான இவர் நேற்றைய முன்தினம் தன்னுடைய உயர் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு போன் செய்து., உடல்நலக்குறைவால் ஒருநாள் விடுப்பு வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த உயர் அதிகாரி, உன்னை விட நான் மிகவும் மோசமான சூழலில் இருக்கிறேன், அதனால் வீட்டு வேலை செய்ய பெண் யாரையாவது அனுப்புமாறு கேட்டுள்ளார்.., அதற்கு சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு நான் ஆண் யாரையாவது அனுப்புகிறேன் என கூறியுள்ளார்.., ஆனால் காவல் ஆய்வாளர் அதற்கு வேறு விதமான கேள்விகளை கேட்டுள்ளார்..
சந்திரன் : சார் குட் ஈவ்னிங் சார்.
உயர் அதிகாரி : சொல்லுப்பா
சந்திரன் : எனக்கு உடல்நலம் சரியில்லை சார். எனக்கு இன்று ஒரு நாள் விடுப்பு வேணும் சார்.
உயர் அதிகாரி : சரிடா… உனக்கு எம்.எல் வேணுமா..? நீ எம்.எல்லும் போட வேணாம் எதுவும் போட வேணாம். நீ எதுவா இருந்தாலும் பார்த்துக்கடா., சார் இருக்கேன் இல்ல…?
சந்திரன் : சரிங்க சார். எதாவது வேணும்னா சொல்லுங்க சார்
உயர் அதிகாரி : நான் சொல்றத கேளு. நான் மனக் கஷ்டத்தில் இருக்கேன். உனக்கு ஒரு மனக் கஷ்டம் வந்தால், எனக்கு ஒரு மனக் கஷ்டம் வரும் புரியுதா..? எதாவது பீஸ் இருந்தால் ரெடி பண்ணி கொடு. பணம் செலவானாலும் பரவாயில்லை.
சந்திரன் : ஃபிஷ்ஷா சார்..? ஃபிஷ் (மீன்) வேணுமா சார்..
உயர் அதிகாரி : அப்போ நீ இரவு 10 மணிக்கு டூட்டிக்கு போகலையா..? நீ வாட்ஸ்-அப் காலில் வா என்பதுடன். அந்த ஆடியோ முடிவடைகிறது.
சமூக ஊடகங்களில் இந்த ஆடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுகுறித்து சந்திரனின் மனைவி ஆர்த்தீஸ்வரி என்பவர் ஐஆர்பிஎன் கமாண்டண்டரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியதாவது.., அந்த உயரதிகாரி என் கணவரிடம் பேசும்போது நானும் பக்கத்தில் தான் இருந்தேன். வாட்ஸ் அப் காலில் வந்தவர், உனக்கு என்ன வேணாலும் நான் செய்து தருகிறேன். என் மனைவி வீட்டில் இல்லை., எனவே ஒரு பெண்ணை எனக்கு அனுப்பிவை என சொன்னார்.
அதையடுத்து என் கணவர் புகார் கொடுத்துள்ளார்.., ஆனால் அந்த உயர் அதிகாரி நீ புகார் கொடுத்தால் தேவையில்லாத பின் விளைவுகளை நீ சந்திக்க வேண்டி இருக்கும்., என மிரட்டினார்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அதிகாரியே இப்படி நடந்துகொள்ளுவது மிக தவறு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் இவ்வாறே குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ