6ம் கட்ட வாக்கு பதிவு..! மெகபூபா உள்ளிருப்பு போராட்டம்..! எந்த தொகுதியில் எவ்வளவு பதிவு..?
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.., இந்நிலையில் 5 கட்ட வாக்குப்பதிவுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று 6ம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
புவனேஸ்வரில் அபராஜிதா சாரங்கி :
ஒடிசா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் அபராஜிதா சாரங்கி புவனேஸ்வரியில் உள்ள வாக்குச்சாவடியில் 6ம் கட்ட மக்களவை தேர்தல் மற்றும் 3ம் கட்ட ஒடிசா சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கும் காலை 9:11 மணிக்கு வாக்களித்தார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு :
டெல்லியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் 6ம் கட்ட மக்களவை தேர்தலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 9:11 மணிக்கு வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
ஒடிசா போலீஸ் கமிஷனர் சஞ்சீப் பாண்டா ஐஏஎஸ், புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 09:33 மணிக்கு வாக்களித்தார்.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9:35 மணிக்கு வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பிரியங்கா காந்தியின் குடும்பத்தினர் வாக்களிப்பு :
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் மகன் ரெஹான் வத்ரா, மகள் மிரயா வத்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9:52 மணிக்கு வாக்களித்தனர்.
காங்கிரஸின் பிரியங்கா காந்தி வாக்களிப்பு :
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் உள்ள வத்ரா வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நாங்கள் எங்கள் குறைகளை ஓரம் கட்டிவிட்டு, நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்காக வாக்களிக்கிறோம்” என கூறியுள்ளார்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாக்களிப்பு :
காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்தி காலை 10:02 மணிக்கு டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாக்களிப்பு :
டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் வந்து காலை 10:02 மணிக்கு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது என்பது ஒரு பொறுப்பு மிக்க சக்தி. இந்தியா உலகின் மிகவும் துடிப்பும், சுறுசுறுப்பும் உள்ள ஜனநாயகம்” என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாக்களிப்பு :
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில், 6ம் கட்ட மக்களவை தேர்தல் மற்றும் 3ம் கட்ட ஒடிசா சட்டமன்ற தேர்தல் என இரண்டிற்கும் காலை 09:54 மணிக்கு வாக்களிதார்.
டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் காலை 10:59 மணிக்கு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலம், காரக்பூர் மாவட்டம் போன்புரா கிராமத்தில் உள்ள கிஸ்மத் அங்குவா மாகாணத்தில் மேதினிபூர் மக்களவை பாஜக வேட்பாளர் அக்னிமித்ர பால் வந்து கொண்டிருந்த வாகனத்தை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து :
டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து, அவரது குடும்பத்தினருடன் வந்து காலை 10:15 மணிக்கு வாக்களித்தார்.
ஹரியானாவின் சார்க்கி தாத்ரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் துரோணாச்சார்யா விருது பெற்ற மல்யுத்த பயிற்சியாளர் மகாவீர் சிங் போகட் 10:42 மணிக்கு வாக்களித்தார். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு பதிவில் தற்போது வரை 18.98% வாக்குகள் பதிவாகியுள்ளது..,
டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சுவாதி மலிவால் காலை 10:08 மணிக்கு வாக்களித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது,
“இன்று ஜனநாயகத்திற்கான நாள். அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசியலில் குறிப்பாக பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது” எனவே பெண்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற மறக்க வேண்டாம்.
அதனை தொடர்ந்து மேற்குவங்கம் – 19.54%
ஜார்க்கண்ட் – 14.74%
டெல்லி – 18.98%
ஜம்மு & காஷ்மீர் – 11.89%
பீகார் – 12.66%
ஒடிசா – 9 – 11.43%
ஹரியானா – 11.31%
உ.பி – 15.33%
செல்போன் அழைப்புகளுக்கு தடை..? மெகபூபா உள்ளிருப்பு போராட்டம்..
இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், ஜே & கே முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, தனது கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அனந்த்நாக் மக்களவைத் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
“காலையில் இருந்து என்னால் எந்த அழைப்பும் செய்ய முடியவில்லை. அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நாளில் திடீரென செல்போ ன் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது அதற்கும் யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ