ஜம்மு காஷ்மீரில் உறுதியான கூட்டணி..!! தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை..!!
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பற்றிய சலசலப்பே இப்போது தான் ஓய்ந்துள்ளது. இப்படி இருக்க மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
அதாவது முதல் கட்ட தேர்தலானது செப்டம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தாக்கல் செய்ய தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 27ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் வேட்புமனு வாபஸானது ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் பெற்றுக்கொள்வதற்கான கடைசி நாள் என தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலானது செப்டம்பர் 25ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும். செப்டம்பர் 9ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளது..
மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவானது அக்டோபர் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி., செப்டம்பர் 12ம் தேதி முடிவடைகிறது. அதேபோல் செப்டம்பர் 17ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் வாக்கு பதிவு அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான தேர்தல் வார் ரூம் தலைவர்களை நியமித்திருந்தது. அதாவது ஜம்மு காஷ்மீரின் வார் ரூம் தலைவராக கோகுல் புட்டைல் நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசிய வார் ரூம் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மீண்டும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கின்றனர். இந்த பயணித்தின்போது கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக தொகுதி பங்கீடு விவகாரங்கள் இந்த பயணத்தின்போது பேசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் மாநாட்டு கட்சி இணைந்து தேர்தலை எதிர் கொண்டது. இதில் காங்கிரஸ் 12 தொகுதிகளையும், தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது.
இதனையடுத்து 2019ல், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீரின் அனைத்து கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன. இதை பயன்படுத்தி, இந்த முறை கூட்டணிக்குள் மக்கள் ஜனநாயக கட்சியையும் கொண்டுவர காங்கிரஸ் கணக்கு செய்திருக்கிறது.
இதன் அடிப்படையில்தான் ராகுல், கார்கே பயணம் அமைந்திருக்கிறது. இன்று இது தொடர்பான அக்கட்சியின் தலைவர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்படும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..