மேற்குவங்கம் அரசை விட்டு விளாசிய உச்ச நீதிமன்றம்..!! ஆதாரத்தோடு வரும் சிபிஐ..!! மருத்துவர்கள் வைத்த கோரிக்கை..!!
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனுக்கள் மீதான விசாரணையை இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு தள்ளி வைத்தது..
இந்த கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், மருத்துவமனையில் நடந்த கலவரங்கள் குறித்து சிபிஐ ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாக அனைத்து விவரங்களையும் அறிக்கையாக வழங்க உத்தரவிட்டிருந்தது.
சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மற்றொரு பாலியல் வன்கொடுமை நடக்கும் வரை காத்திருக்க முடியாது. வேரூன்றி போய் உள்ள ஆணாதிக்கம் கொண்டவர்களை பெண் மருத்துவரின் உறவினர்கள் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பல மணி நேரம் தொடர்ந்து வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியை கூட மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை.
குறிப்பாக மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் கிடையாது. குறிப்பாக அந்த மருத்துவமனையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கேள்வி குறியாகிவிட்டது. அமைதியான போராட்டக்காரர்கள் மீது மேற்குவங்கம் மாநில அரசு அவர்களது அதிகாரத்தை காட்ட வேண்டாம், என உச்ச நீதிமன்றம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது..
தற்போது தொடர்ந்து 6வது நாளாக RG கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சஞ்சோய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மருத்துவ நிபுணர்கள் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரச்சினையை ஆராய, உச்ச நீதிமன்றத்தால் தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் இன்னும் மூன்று வாரதிற்குள் இடைக்கால அறிக்கையும், இரண்டு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்கும் படி பணிக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் தேசிய பணிக்குழுவிற்கு தகவல் அளித்து ஒத்துழைப்பு தரும் படி கேட்டுக்கொண்டுள்ளது. அதே சமயம் இந்த பிரச்சினையில் மத்திய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் தங்களது கோரிக்கைளை முன் வைத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..