கர்ப்ப காலங்களில் பெண்கள் சாப்பிட வேண்டிய ஊதா நிற உணவுகள்..!
கர்ப்ப காலங்களில் பெண்கள் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், அவர்கள் சாப்பிட வேண்டிய ஊதா நிற உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கத்தரிக்காய்:
கத்தரிக்காயில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி, போலட் மற்றும் பல வகை ஊட்டச்சத்துக்கள் கர்ப்ப காலத்தில் உண்டாகும் BP, ரத்தசோகை ஆகிய பிரச்சனைகளை தடுக்கிறது.
திராட்சை:
திராட்சையில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் சில ஊட்டங்கள் கர்ப்ப காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல், இரத்த அழுத்தம் ஆகியயவற்றை தடுக்கிறது.
மாதுளைபழம்:
கருவில் வளரும் குழந்தையின் நலனை காப்பதில் மாதுளை மிக முக்கிய பங்காற்றுகிறது. மாதுளையில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை கர்ப்ப கால பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.
கொடிமுந்திரி:
கொடிமுந்திரியில் இருக்கும் வைட்டமின் கே, நார்ச்சத்து மற்றும் பல ஆண்டி ஆக்ஸிடண்டுகள் உடலில் செரிமான செயல்பாட்டை சீராக்குகிறது. மேலும் எலும்புகளுக்கு வலிமையளித்து கர்ப்ப கால முதுகுவலி பிரச்சனைகளை தடுக்கிறது.
ஊதா முட்டைக்கோஸ்:
ஊதா நிற முட்டைக்கோஸானது வைட்டமின் சி, கே மற்றும் பொட்டாசியம் உள்ளதால் வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் உருவாக உதவுகிறது. மேலும் எலும்பு மண்டலம், செரிமான மண்டலம் காக்கவும் உதவுகிறது.
ஊதா நிற கேரட்:
ஊதா நிற கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்ஸிடண்டுகள் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளருவதை ஊக்குவிக்கிறது.
பிளம்ஸ்:
பிளம்ஸில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பல ஊட்டங்கள் குடலில் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இது கர்ப்ப கால ஆரோக்கியத்தை பெரிதும் காக்கிறது.