”பாதாள சாக்கடை திட்டம்…” துணை பட்ஜெட் தாக்கல்…!! அமைச்சர் கே.என்.நேரு உறுதி…!!
2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளுக்காக துணை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபையில் துறைகள் வாரியான மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடங்கியது. முன்னதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த ஆண்டில் குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வருகின்ற நிதி ஆண்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை புறநகர் பகுதிகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும், மாநகர பகுதியில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் மதுரை அறந்தாங்கி உட்பட்ட நகராட்சி பகுதிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..