எந்த பருவத்திற்கு எந்த கீரை ஆகாது..!
அகத்திக்கீரை மற்றும் புளிச்சை கீரையை சித்திரை, வைகாசி போன்ற கோடைக்காலங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அரைக்கீரை, சிறுகீரை, கீரைத்தண்டு, பருப்புக்கீரை மற்றும் முள்ளங்கிகீரையை ஆனி, ஆடி போன்ற காற்று அதிகமாக உள்ள நாட்களில் தவிர்க்க வேண்டும்.
பசலைக்கீரை, முள்ளங்கிகீரை, வெந்தயக்கீரை, பருப்புக்கீரை, சிறுகீரையை ஆவணி, புரட்டாசி போன்றவற்றை முன் மழைக்காலங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அகத்திக்கீரை, பசலைக்கீரை, சிறுகீரை, கீரைதண்டு ஆகியவற்றை ஐப்பசி, கார்த்திகை போன்ற பின் மழைக்காலங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முள்ளங்கிகீரை, பசலைகீரை, சிறுகீரை, அகத்திக்கீரை மார்கழி, தை ஆகிய முன் பனிக்காலங்களில் தவிர்த்தல் வேண்டும்.
பசலைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை ஆகியவற்றை மாசி,பங்குனி ஆகிய பின் பனிக்காலங்களில் தவிர்த்தல் வேண்டும்.
கொத்தமல்லி, புதினா, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றை அனைத்து காலங்களிலும் சாப்பிடலாம்.
