ஜோகோவிச் “தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி” வைத்து சாதனை படைத்த “ஸ்பெயின் கார்லஸ் அல்காரஸ்”..!!
கடந்த 3ம் தேதி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்த்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.., அதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.., மகளிருக்கான ஒற்றை பிரிவு போட்டியில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த “மார்க்கெட்டா வோட் ரூசோவா” முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று சென்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில் பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி.., நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றார்.., இந்நிலையில் ஆண்கள் ஒற்றை பிரிவு இறுதி போட்டி நேற்று நடைபெற்றது, அதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த “கார்லஸ் அல்காரஸ்” மற்றும் செர்பியா நாட்டை சேர்ந்த “நோவாக் ஜோகோவிச்” இருவரும் மோதினர்.
பரபரப்பாக நடந்த இந்த இறுதி போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என்று கைப்பற்றினர்.., அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அல்காராஸ் 2வது செட்டை 7-6 என்று கைப்பற்றிய நிலையில் 3 செட்டில் 6-1 என்று வென்றனர் இதை தொடர்ந்து 4 ஆவது செட்டை ஜோகோவிச் 6-3 என கைப்பற்றினார்.
இறுதி போட்டி விறுவிறுப்பாக சென்ற போது அதில் கார்லஸ் அல்காரிஸ் 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்று சென்றார்.., ஜோகோவிச் முதல் முறையாக 20 வயது வீரரிடம் தோல்வி அடைந்து இருப்பது இதுவே முதல் முறை இதற்கு முன் ஜோகோவிச் 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் 23 முறை கிராடலாம்ஸ் பட்டத்தை கை பற்றி இருக்கிறார்.
வெற்றி குறித்து பேசிய கார்லஸ் அல்காரஸ் :
ஜோகோவிச்சை பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கினேன் ஆனால் இன்று அவர் முன் நான் வெற்றியாளராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இந்த வெற்றி என் நீண்ட நாள் கனவு இந்த வெற்றிக்கு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என கூறினார். இவரின் இந்த வெற்றிக்கு பலரும் சமூக வலைத்தளம் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post