கர்பக்கால மந்தத்தை சரி செய்ய சில டிப்ஸ்..!!
கர்ப்பகாலத்தில் ஏற்படும் மந்தம் மற்றும் அதை சரி செய்வதற்கான சில டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் அதிகப்படியான ஆசிட்ஸ் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் back pressure அதிகமானால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் அதிகரிக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.
இந்த பிரச்சனை ஏற்படுவதற்கான முதல் காரணம் எதுவும் சாப்பிடாமல் நீண்ட நேரம் வெறும் வயிற்றில் இருந்தால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படும்.
சில உணவு பழக்கங்களை மாற்றிக்கொண்டால் இதில் இருந்து விடுபடலாம்.
* அதிகம் காரம் நிறைந்த உணவு பொருட்களை தவிர்க்கலாம்.
* எண்ணெயில் அதிகம் கொறித்த உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
* ஒரு நாளைக்கு 3 வேளைக்கு மேல் சாப்பிட வேண்டும். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் பழங்கள் மற்றும் ஜூஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* இரவு உணவு சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்து தான், தூங்க வேண்டும்.
* தூங்குவதற்கு முன் காற்றோட்டத்தில் நடப்பது நல்லது.
* சாப்பிடும் பொழுது தலை நிமிர்ந்து சாப்பிட வேண்டும்.
* தினசரி 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் கடுமையான வாந்தி, வயிற்று வலி மற்றும் எடை குறைப்பு போன்றவை ஏற்பட்டால், உங்களின் மகப்பேறு மருத்துவரிடம் கட்டாயம் சொல்ல வேண்டும்.
மேலும் இது போன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post