அடர்த்தியான கூந்தலுக்கு சில டிப்ஸ்..!
பல பெண்களுக்கு அடர்த்தியான அழகான கூந்தல் வைத்துக்கொள்ள பிடிக்கும். ஆனால் சருமத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் பெண்கள். கூந்தலில் கவனம் செலுத்த மறுக்கின்றார்கள்.
கூந்தல் மென்மையாகவும், நீளமாகவும் இருக்கும் பொழுது அதிகமாக கூந்தல் உதிர்வு ஏற்படும். தலைக்கு குளிக்கும் பொழுதும், எண்ணெய் தடவும் பொழுதும், கூந்தல் உதிர்வதை பார்க்கின்றோம் அதிலும் நூற்றில் 90 பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது.
அதற்கான காரணம் உடலில் ஆரோக்கியம் இல்லாததும், கூந்தலுக்கு சரியான பராமரிப்பு இல்லாததும் தான். இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதும் தான் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
மனஅழுத்தம் : மனதில் தேவையில்லாத சிந்தனைகளை நினைத்து கொண்டு அதை மூளைக்கு கொண்டுச்செல்லும் போது கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது.
கூந்தல் உதிர்விற்கு : கூந்தலின் வளர்ச்சிக்கு அதன் வேர் வலுவாக இருக்க வேண்டியது அவசியம், அதிக ரசாயணம் இல்லாத பொருட்களை பயன் படுத்த வேண்டும். வாரத்திற்கு மூன்று முறையாவது ஆர்கானிக் நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
எப்பொழுது அதிக வெது வெது வென்று இருக்கும் தண்ணீரை பயன் படுத்தக்கூடாது. கூந்தலின் நுனியிலும் எண்ணெய் கசக்கியவாறு தேய்க்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் வைத்து முடிக்கு தேய்க்க வேண்டும். இதனால் தலையில் உள்ள சூடு இரங்கி குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
மேலும் இது போன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள, தொடர்ந்து படித்திடுங்கள்
வெ.லோகேஸ்வரி.
Discussion about this post