சருமப் பராமரிப்பில் செய்யக்கூடாத சில தவறுகள்..? இதையும் படியுங்கள்
கோடைகாலம், மழை காலம், பனிக்காலம், குளிர்காலம் என அனைத்து காலங்களிலும் நம் உடலை எவ்வளவு பாதுகாப்பாக வைத்து கொள்கிறோமோ. அதே அளவு சருமத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நாம் பல முயற்சிகளை செய்கிறோம். ஆனால் அது நம் முகத்திற்கு அது ஏற்றதா என நமக்கு தெரியுமா ?
நம் சரும பராமரிப்பில் செய்யக் கூடாதவை..!
வயதானவர்களாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், இளம் பருவத்தினராக இருந்தாலும் மேக்கப் இல்லாமல் வெளியே வர விரும்ப மாட்டர்கள். அதிலும் சிலர் காஜல், பவுண்டேஷன், லிப்ஸ்டிக், என எப்பொழுதும் மேக்கப்பிலே இருப்பார்கள். இன்னும் சிலர் மேக்கப் கிட்டுடன் தான் சுற்றுவார்கள்.
முகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக முகத்தை அடிக்கடி கழுவி கொண்டே இருப்பார்கள், ஆனால் அது தவறு ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் முகம் கழுவக் கூடாது, அதேப்போல் டவலில் முகத்தை துடைக்கும் பொழுதும் மென்மையாக தான் துடைக்க வேண்டும்.
மாற்றாக செய்தால் முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசபசப்பு நீங்கி வறண்டு விடும்.
கண்களில் காஜல் அதிகமாகி விட்டால், டவலில் துடைக்க முயற்சிப்பார்கள் ஆனால் அது தவறு. ஒரு சிறிது அளவு பஞ்சு எடுத்து அதில் மேக்கப் ரிமோவர் க்ரீம் வைத்து துடைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் கண்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
முகத்தை கழுவிய பின் சிறிது ஈரப்பதம் இருக்கும் பொழுதே மாய்ஸ்ரைசரை பயன் படுத்த வேண்டும். அதை முகத்தில் தேய்க்கும் பொழுதும் மென்மையாக தேய்க்க வேண்டும்.
இரவில் தூங்கச் செல்லும் பொழுது மேக்கப் களை கழுவி விட்டு , தூங்க வேண்டும். அப்பொழுது தான் முகத்தில் உள்ள சருமத் துகள்கள் இன்றி சுவாசிக்க முடியும். இதனால் காலை கூடுதல் பொலிவு கிடைக்கும்.
மேலும் இதுப்போன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post