குழந்தையை வியர்க்குரு, அலர்ஜியில் இருந்து பாதுகாக்க..? இதை செய்து பாருங்கள்
வெயிலின் தாக்கத்தில் சில குழந்தை களுக்கு வியர்க்குரு, அலர்ஜி போன்றவை ஏற்படும் அதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்
சிலர் கற்றாழை உபயோகிக்கலாம் என்று சொல்லுவார்கள் ஆனால் ஒரு சிலர்க்கு கற்றாழையின் வாடை பிடிக்காது. கற்றாழைக்கு பதில் நலங்கு மாவை பயன்படுத்தலாம்.
நலங்கு மாவு பயன்படுத்துவதால் அலர்ஜி ஏற்படுத்தாமல் இருக்கும். வியர்க்குரு வ்ருவதையும் கட்டுப் படுத்தும். சருமம் வறண்டு போகாமல் இருக்க வைக்கும்.
இதனை தயார் செய்வதும் மிக சுலபம் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, வெட்டிவேர், விளாம்பிச்சை வேர், சந்தனம், ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கோரைக்கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு, கார்போக அரசி, கஸ்தூரி மஞ்சள் என அனைத்தும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை அரைக்கும் பொழுது ஆண் குழந்தைக்கு கஸ்தூரி மஞ்சள் அறவே தவிர்த்து விடாமல். இதை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி சொறி சிரங்கில் இருந்தும் பாதுகாக்கிறது.
வியர்வை வாடை வராமலும் தடுக்கிறது. இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தொடைகள் உரசி அதனால் தொடை மற்றும் அக்குள் பகுதியில் கருத்து போய் இருக்கும். அதை குணமாக்கவும் உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள , தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி