உயரம் அதிகமாகனும்னா இதை சாப்பிடுங்க…!!
அவர்கள் அவர்களுடைய மரபணுவை வைத்தே உயரமாக இருப்பதும் உயரம் குறைவாக இருப்பதும் உள்ளது.
இருப்பினும் சிலருக்கு அவர்களது ஊட்டச்சத்து காரணமாகவும் உயரம் குறைவாக இருப்பார்கள்.
அப்படி ஊட்டசத்து காரணத்தினால் உயரம் குறைவாக இருப்பதாக உணர்பவர்கள் கீழே தரப்பட்டுள்ள உணவுகளை சாப்பிட்டு அவர்களது உயரத்தைக் கூட்டிக்கொள்ளலாம்.
பீன்ஸ் : பீன்ஸில் உங்களது உயரத்தை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் அடங்கி உள்ளன.
பாதாம் : அன்றாடம் பாதாம் சாப்பிடுவதினால் உடலுக்கு பல்வேறு வகையில் அதிகமான நன்மைகள் கிடைக்கிறது.
மேற்க்கொண்டு பாதாம் சாப்பிடுவதால் உயரத்தை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் இருக்கிறது.
கீரைகள் : கீரை மற்றும் பச்சை இலைகளை பெற்றுள்ள காய்கறிகள் உடலுக்கு நன்மை தருவதில் முதல் இடம் பெற்றுள்ளது.
கீரைகளை உட்கொண்டால் எலும்பு அடர்த்தியை கூட்டி உங்களின் உயரத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
தயிர் : இந்த கோடைக் காலத்தில் தயிர் உட்கொள்வது ஒரு சிறப்பான உணவாகும். தயிரில் உடல் உயர வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் இதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குயினோவா : உடல் உயரத்தை அதிகரிக்க மட்டுமில்லாமல் உடல் எடையை குறைப்பதற்கும் குயினோவா உதவுகிறது.
முட்டைகள் : புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள முட்டை உடலின் உயரத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு புரதச்சத்தால் உடல் வளர்ச்சி அடைகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
