சிம்பலான சுவை மிகுந்த அரிசி பருப்பு சாதம்…!
அரிசி -1கப்.
துவரம் பருப்பு -1/2 கப்.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
நெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம்-1கப்.
கருவேப்பிலை- சிறிதளவு.
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-1 கப்.
தக்காளி-1 கப்.
பூண்டு-5
தனியா-1 தேக்ககரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
பட்டை -சிறுதுண்டு.
கிராம்பு-1.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
ஒரு பாத்திரத்தில் அரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நீரில் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுந்து, சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும்.
மிக்ஸியில் தனியா, சீரகம், மிளகு, சோம்பு, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த பொடியை வதக்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்தில் சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கிளறி பின் அதில் ஊற வைத்த அரிசி , பருப்பு ஆகிவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.
