சமையல் குறிப்புகள்..!
சப்பாத்தி மாவு பிசையும்போது மாவில் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் பால் சிறிது சேர்த்து பிசைந்து சப்பாத்தி சுட்டால் சப்பாத்தி சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.
ஒரு சுத்தமான சிறிய துணியில் சிறிது உப்பு சேர்த்து துணியை முடிந்து அதனை மாவில் போட்டு வைத்தால் வண்டுகள் மாவில் அண்டாது.
புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை வாடி துவண்டு விட்டால் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனை காய்கறி பொரியலில் தூவி செய்தால் ரொம்ப ருசியாக இருக்கும்.
கீரை கட்டு வாடாமல் இருக்க அதன் வேர்களை நீரில் மூழ்கும்படி வைத்து அதன் இலைகளை ஒரு ஈரத்துணியால் மூடி வைத்தால் கீரை வாடாமல் இருக்கும்.
சுண்டல் கெடாமல் இருக்க அதில் கொப்பரை தேங்காய் துருவி வதக்க வேண்டும்.
சாதம் சிறிது குழைந்து போய்விட்டால் அதில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து பின் வடித்தால் சாதம் சிறிது நெத்தாக இருக்கும்.
சிறிது உப்பு நீரில் தக்காளியை போட்டு வைத்தால் தக்காளி சுவை மாறாமலும் கெடாமலும் இருக்கும்.
மீன் கெட்டுபோனதா என அறிந்துக் கொள்ள மீனை நீரில் போட்டால் மீன் மூழ்கினால் அது நல்ல மீன், மிதந்தால் அது கெட்டுபோனது என அர்த்தம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய உருளைக்கிழங்கை நறுக்கி கழுவி பின் மோரில் சிறுது நேரம் போட்டுவைத்து பிறகு பொரித்தால் உருளைகிழங்கு சிப்ஸ் வெள்ளையாகவே இருக்கும்.
