“அண்ணாமலை, ஒரு அரைவேக்காடு, தகர டப்பா கேள்வி கேட்க துப்பில்லை” கிழித்தெடுத்த அமைச்சர் உதயகுமார்..!!
அண்ணாமலை ஒரு அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் போல அவர் சிறந்த மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது மதுரையில் அதிமுக ஜெ.பேரவையில் மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அண்ணாமலையை விளாசி பேசியுள்ளார்..
மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஜெயலலிதா பேரவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் வரலாறு தெரியாமல் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதும் அப்படி தான் இருக்கிறது.. அவர் உடனடியாக சிறந்த மனநல மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது.. சித்தம் கலங்கியவர்கள் பேசுவது அவர்களுக்கே புரியாது என சொல்லுவார்கள்.., அது போல தான் அண்ணாமலையின் உளறல் பேச்சு.
ஒரு கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாத அரைவேக்காடு, ஆக்டோபஸ், அட்டைப்பூச்சி அண்ணாமலை அரசியல் வரலாறு என்ன..? அதிமுக என்றால் என்ன என்று தெரிந்துக்கொண்டு வரைமுறையுடன் பேச வேண்டும்.
ஒன்றியத்தில் அவரது கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளாரா..? கல்வி, சுகாதார மேம்பாட்டுக்கு ஏதேனும் திட்டங்களை அறிவிக்க செய்துள்ளாரா..? வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரவும், வறுமையை ஒழிக்கவும் ஏதேனும் பங்காற்றி உள்ளாரா..?கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் சமூக நீதி காப்பதில் தொடங்கி அதிமுக பல்வேறு போராட்டங்கள் நடத்தி தீர்வு கண்டுள்ளது.
இந்த வரலாறு பற்றியெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிகார வெறி, பதவி மோகத்தால் பிரம்மை பிடித்தவர் போல அவர் நடந்துக்கொள்கிறார்..,
இதனால் தமிழ்நாடு மக்களுக்கு எந்த வித பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு பாஜகவின் பங்களிப்பு பட்டியலை வெளியிட தயாரா..? மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள உங்கள் கட்சி இருக்கிறது..
ஆனால் மத்திய பட்ஜெட்டில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாடு இடம்பெறவில்லை அதை கேட்க துப்பில்லாத, துப்புக்கெட்ட அண்ணாமலை.. நீ கொஞ்சம் கூட வாய் திறக்கவில்லை.
எதை வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், யாரை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது..? அவர் வகிப்பது நியாயமான பதவியா நாளை காலை அவரை பதவியில் இருந்து எடுத்துவிட்டால் அவரை சீண்ட ஆள் இல்லை.
இதில் இருந்து தப்பிக்கவே வெளிநாட்டுக்கு படிக்க போவதாக அண்ணாமலை சாக்கு சொல்கிறார். நிறைகுடம் தளும்பாது. “அண்ணாமலை ஒரு காலி தகர டப்பா.. இந்த டப்பா எழுப்பும் சத்தத்தால் மக்களுக்கு என்ன பயன் இருக்கிறது..
முதலமைச்சர் கனவில் உள்ள அண்ணாமலை உன்னுடைய பகல் கனவு பலிக்காது ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அண்ணாமலை எங்களை 10 ஆண்டு அல்லது 20 ஆண்டு சிறையில் தள்ளுவாரா..? எங்களை சிறையில் அடைத்தாலும் உங்கள் முகத்திரையை நாங்கள் கிழிப்போம். என இவ்வாறே அமைச்சர் உதயகுமார், அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்து பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..