பாடும் நிலா SP. பாலசுப்பிரமானியம்..! நீங்க நினைவுகள்..!
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர்.
எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்பட்ட இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.
பாடும் நிலா:
1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கிய இவர் சுமார் 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.இதனால் இவரை “பாடும் நிலா” என்று அழைக்கப்படுகிறார்.
இசை மீது ஆர்வம்:
பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை அரிகதை வாசிக்கும் பொழுது கவனித்து, ஆர்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார்.
இசையில் அதிக நாட்டம் கொண்ட பாலசுப்பிரமணியம், கல்லூரியில் படிக்கும் போதே பல பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் குவித்துள்ளார்.
மூச்சு விடமல் பாடிய பாடல்:
எஸ் பி பி என்று சொன்னதும் அவர் பாடகர் என்பதை தாண்டி நம் நினைவில் முதலில் வருவது கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற ‘மண்ணில் இந்த காதல்’ பாடலில் வரும் சரணத்தில் எஸ் பி மூச்சு விடாமல் பாடியது மற்றும் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடலும் தான்.
இவ்வாறு எண்ணற்ற பாடல்களை நமக்கு அள்ளி கொடுத்த வல்லல் இவ்வுலகில் இல்லை என்றாலும் அவர் பாடிய பாடல்களின் மூலம் எல்லோருடைய மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்.
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வாய் என்று பாடிய பாடும் நிலா “பாலசுப்பிரமணியம்” அவர் பிறந்த தினம் இன்று. அவரை பற்றிய இந்த தொகுப்பை எழுதுவதில் நம் மதிமுகம் பெருமைகொள்கிறது.
…….
-பவானிகார்த்திக்