மீண்டும் பிரதமரான மோடி..! எத்தனை வாக்கு வித்தியாசங்கள்?
உத்தரபிரதேசம் :
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இது கடந்த 2019-ம் ஆண்டு அவர் வென்ற வாக்குவித்தியாசத்தை விட குறைவு என்பது குறிப்பிடதக்கது.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் 4.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மோடி இந்த மக்களவை தேர்தலில் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
வாரணாசி :
இன்று நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு மாலை 7மணியளவில் வெளியானது.
இந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி பின்தங்கியிருந்தார்.
அவரை எதிர்த்து வாரணாசியில் களம் கண்ட, அஜய் ராய் முன்னிலையில் இருந்தார்.
அடுத்தடுத்தச் சுற்றுகளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றார்.
இதையடுத்து வாரணாசி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது.
வாக்கு வித்தியாசம் :
அதன்படி, பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 460457 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 513. இதை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடி பதிவு :
இதையடுத்து பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது, தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. மக்களின் அன்பிற்கு அடிபணிகிறேன்.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கடந்த 10 ஆண்டு நல்லாட்சி தொடரும்.
வெற்றிக்காகக் கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களை வணங்குகிறேன்.
அவர்களது கடின உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனப் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..