வெட்கம் – எழுத்து கிறுக்கச்சி கவிதை-5
கன்னம் சிவக்க..,
கைகள் கண்களுக்கு திரையிட
உதடு புன்னகைக்க..,
அதை மறைக்க சொல்லப்படும் பொய்யே…, “வெட்கம்”
உன்னை காணும் நொடியெல்லாம்
என்னுள் மறைக்கப்பட்ட ஒரு புதையல்..
என் பெண்மையின் வெளிப்பாடு
என நினைத்தேன்…,
அதை களவாடிய கள்வன் நீ ஆனதால்
கோபம் கொள்ளாமல் சிரிக்கிறேன்…
-லோகேஸ்வரி