அவளின் அன்பை விட உலகில்..! எழுத்து கிறுக்கச்சி கவிதை-4
ஒரு வீட்டில் நம்மை பெற்ற தாயுடன் நம்மை வளர்க்கும் மற்றோரு தாய் யார் என்று பார்த்தால்.., அவள் நமக்கு முன் பிறந்த அக்கா மட்டுமே..,
அவள் குழந்தையாக நான் பிறக்கவில்லை
இருந்தும் என்னை அவள் குழந்தை என வளர்ப்பாள்
நான் செய்யும் சேட்டைகளை ரசிப்பாள்..,
சில சமயம் கண்டிக்கவும் செய்வாள்..,
எனக்காக துடிக்கும் அவளுக்கு தெரியாது..,
எனக்காக துடிக்கும் அவளுக்கு தெரியாது..,
அவளின் மீது நான் வைத்த அன்பு என்ன வென்று..,
என்னை குழந்தையாக வளர்ந்தவள் பிரிந்து வேறு வீட்டிற்கு
செல்லும் போது.., என் கண்கள் அந்த அன்பை வெளிப்படுத்தியது…,
தாயாக என்னை வளர்த்த அவளை பற்றி சொல்ல வரிகள் போதாது..,
மீண்டும் ஒர் ஜென்மம் கொடு இறைவா அவளே எனக்கு “அக்கா”வாக பிறக்க..
-லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..