ஆரம்பிக்கலாமா..? இனி உங்க ஊர்ல என் ஆட்டம் தான்..
திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது… இன்னும் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் குமரிகடல் பகுதி முதல் குமரிகடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.. அதன் காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்துள்ளது..
நாளை முதல் இன்னும் 6 நாட்களுக்கு புதுச்சேரி, கன்னியாகுமரி, காரைக்கால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் சென்னை புறநகர் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..