வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சீமான் தன் மனைவியுடன் ஆஜரானார்.
கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது என்னை ஏமாற்றியதாக புகார் அளித்தார். நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். சீமான் ஆஜராவதை தொடர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசாரணைக்கு சீமானுடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சர்ச்சை நாயகன் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சம்பவம்… இணையத்தில் வைரலாகும் டிடிஎஃப் வாசன் வீடியோ..!
Discussion about this post