எப்படி சட்டமன்ற தேர்தலில் எப்படி அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமோ அதே போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம் ஆவேசமாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுக வின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது, ஒரு கிளை செயலாளரை கூட தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு கலைஞர் நம்மை உருவாக்கியுள்ளார். அதன்படியே தற்போதைய தலைவரும் செயல்பட்டு வருகிறார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டம் தோறும் மாரத்தான் போட்டி, பேச்சு போட்டி நடத்த இளைஞர் அணி முடிவு செய்துள்ளது.
இளைஞரணியின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய திட்டம். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாவட்டத்தை மிகச் சிறப்பாக, இதுவரை நடக்காத மாநாடாக நடத்திக் காட்டுவோம். அந்த மாநாட்டின் வெற்றி என்பது எப்படி சட்டமன்ற தேர்தலில் எப்படி அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமோ அதே போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம் என பேசினார்.