பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
பல்வேறு சர்ச்சையில் சிக்கி அடிக்கடி காவல்நிலையத்திற்கு செல்லும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே பைக் வீலிங் செய்து கொண்டிருந்தபோது டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு கை உடைந்துள்ளது. பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணம் செய்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காவல்துறை பலமுறை எச்சரித்தும் விதிகளை மீறி வீலிங் செய்ததால் விபத்து நேர்ந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
*பிரபல யூடியூபர் TTF வாசன் பைக்கில் சென்றபோது காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்ததாக தகவல்* pic.twitter.com/sS03bUEPsK
— நரசிம்மன்🇮🇳🕉️🚩 (@Narasim18037507) September 17, 2023
Discussion about this post