அதானி குழுமத்துடன் செபிக்கு தொடர்பு..!! நாடாளுமன்ற கூட்டுக்குழுவை விசாரிக்க எதிர்க்கட்சி வலியுறுத்தல்..!!
அமெரிக்காவின் பிரபல “ஷார்ட் செல்லர்” நிறுவனம் என சொல்லப்படும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை அதானி குழுமத்தை உலுக்கியது. அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான “செபி” அதனை 1 வருடதிற்கும் மேலாக விசாரணை செய்து வருகிறது.
அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய விஷயம் வரப்போவதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த பதிவு இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. அதில், ஊழல் புகாரில் தொடர்புடைய அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்ததாக தெரிவித்தது. இந்த அறிக்கை தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு :
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும் உள்நோக்கம் கொண்டவை எனவும் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறோம் எனவும் எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படை தன்மை கொண்டவை எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு வழக்கை சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு வலுவான காரணங்கள் வேண்டும். எனவே, செபியே இந்த விவகாரத்தைத் தொடர்ந்து விசாரிக்கும்’ என தனது உத்தரவில் தெரிவித்து விட்டது. இந்த நிலையில்தான், இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரிய (செபி) தலைவரும் அவரது கணவரும் அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதாக, ஹிண்டன்பர்க் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு, ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செபி தலைவர் மாதபி புரி புச், அவரது கணவர் தவல் ஆகிய இருவரும், வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் ‘360 ஒன் டபிள்யூஏஎம்’ என்ற நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். இந்த நிதி மேலாண்மை அமைப்பு, ஐஐஎப்எல்-ன் (இந்தியா இன்போலைன் பைனான்ஸ் நிறுவனம்) கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு இந்த விவகாரத்தை விசாரணை செய்யும் வரை, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் அரசியலமைப்பின் கீழ் செயல்படும் சில நிறுவனங்களை சமரசம் செய்து, தனது கூட்டாளியை தொடர்ந்து யார் பாதுகாப்பார் என்ற கவலையே அதிகம் இருக்கும். இந்த முரண்பாடுகளை அரசு உடனடியாக கட்டுப்படுத்திட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.. அதேசமயம் அதானியின் குழுமம் முறைகேட்டில் ஈடுபடவில்லை என செபி நற் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார்…
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், சிறு சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பத்திரக் கட்டுப்பாட்டாளரான செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நேர்மையான முதலீட்டாளர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தமான கேள்விகளைக் கொண்டுள்ளனர்..
The integrity of SEBI, the securities regulator entrusted with safeguarding the wealth of small retail investors, has been gravely compromised by the allegations against its Chairperson.
Honest investors across the country have pressing questions for the government:
– Why… pic.twitter.com/vZlEl8Qb4b
— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2024
செபி தலைவர் மாதபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை..? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், யார் பொறுப்புக் கூறுவார்கள் – பிரதமர் மோடி, செபி தலைவர் அல்லது கௌதம் அதானி..? புதிய மற்றும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை மீண்டும் ஒருமுறை தானாகப் பார்க்குமா..?
ஜேபிசி விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அதன் மூலம் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..