நள்ளிரவில் தேவதையாக காட்சி கொடுத்த அம்மன்..!! பிரமித்த ஊர் மக்கள்..!!
சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாநகர் ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோவில் 54ம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது..
ஆகஸ்ட் 2ம் தேதி மாலை மேளதாளங்கள் முழங்க அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.. அப்போது கொருக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதி முழுவதும் மக்கள் தீப ஆராதனை செய்து வழிபட்டனர்..,
அதன் பின் அன்று மாலை அம்மனுக்கு ஊர் தலைவர் மற்றும் ஊர் நிர்வகிஸ்தர்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டனர்.. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின் கடந் த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8 ) அன்று இரவு மகளிர் குழு சார்பாக அப்பகுதி பெண்கள் விளக்கு பூஜை எடுத்து வழிபட்டனர்..
அதனை தொடர்ந்து திருவிழாவின் 9ம் நாளான ஆகஸ்ட் 9ம் தேதி (வெள்ளிக்கிழமை ) அன்று மாலை அம்மனுக்கு 1000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு (வேல்) குத்தியும், பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும்., காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்..,
ஆடிமாதத்தின் சிறப்பான நேற்று காலை கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது., அதன் பின் அன்று இரவு “அங்காள அம்மன்” மேளதாளங்கள் முழங்க குதிரை வாகனத்தில் “தேவதையாக” காட்சி கொடுத்தார்…
அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து.., தேங்காய் சூரையிற்றும் வரவேற்றனர்.. அதுமட்டுமின்றி பலரும் தீப ஆராதனை செய்து வழிபட்டனர்.. எப்பொழுதும் ஓர் வளம் அம்மன் அளிக்கும் காட்சியை விட இந்த முறை தேவதை போல அம்மன் காட்சி கொடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..