“ஆணவக்கொலை குற்றமில்லை” நடிகர் பா.ரஞ்சித்..!! திருமாவளவன் நச் பதில்..!!
ஆணவக்கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுவதாக ஆணவப்படுகொலை குறித்த நடிகர் ரஞ்சித்தின் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான கவுண்டம்பாளையம் திரைப்படம் பல சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த படத்தை பார்த்த பிறகு நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது.,
பெற்றவர்களுக்கு தான் தெரியும், பிழைகள் மீதான அக்கறையும் பாசமும்., ஒருசில நேரத்தில் பிள்ளைகள் பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம் தான் அது, அது வன்முறை அல்ல” என பதில் அளித்திருந்தார்…
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதையை செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆணவக்கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுவதாக ஆணவப்படுகொலை குறித்த நடிகர் ரஞ்சித்தின் பேச்சுக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது .
இதற்க்கு பதில் அளித்த அவர், படம் எடுத்து லாபம் சம்பாதிக்க சிலர் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசி வருகின்றனர்;சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசுவது நாட்டிற்கு நல்லதல்ல; ஆணவக்கொலை குற்றமில்லை எனக்கூறுவது அறியாமையை காட்டுகிறது என்று தெரிவித்தார்.
ஆணவக்கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுவதாக ஆணவப்படுகொலை குறித்த நடிகர் ரஞ்சித்தின் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..