நான் கேடுகெட்ட ரவுடி என சீமான் தெரிவித்தது தற்போது கண்டத்திற்கு உள்ளாகி வருகிறது.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்…
சீமான் அவரது மனைவியுடன் வரவேண்டும் என்று வீரலட்சுமி கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜயலட்சுமி என்னுடைய படத்தில் நடித்தவர். என் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார். வீரலட்சுமி யார்? வீரலட்சுமிக்கு இதில் என்ன வேலை? என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சான்றுகள் இருக்கிறதா? ஊடகங்களும், காவல் துறையும் கேட்கவில்லை.
ஒருவேளை நாம் தமிழர் கட்சியினர் ஒருநாள் அவரை தாக்கிவிட்டால், சட்டம் – ஒழுங்கை சீமான் கெடுத்துவிட்டதாக கூறுவீர்களா? வீரலட்சுமி யார்? அவர் கூறுகிறார், ஒரு துணை நடிகைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து செட்டில் செய்துவிட்டதாக கூறுகிறார். அந்த துணை நடிகை யார் தெரியுமா? வீரலட்சுமிதான். எதற்காக அவருக்கு இவ்வளவு கோபம்? செட்டில்மென்ட்டின்போது அவருக்கு காசு குறைவாக கொடுத்துவிட்டேன். அந்தக் கோபத்தில் அவர் கத்திக் கொண்டிருக்கிறார். என்னைப் பற்றி அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் யாரென்று நினைத்துக் கொண்டு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். யூடியூப் சேனல்களில் உட்கார்ந்து கொண்டு வீரலட்சுமி ஏதேதோ பேசுகிறார்.
நான் ஜனநாயகவாதியாக இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சினை. நான் யாரென்று தெரியுமா? கேடுகெட்ட ரவுடி நான். என்னுடைய பிள்ளைகளை பலியிட நான் தயாராக இல்லை. என்னை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதாக வீரலட்சுமி கூறுகிறார். ஸ்கெட்ச் பேனாவை தூக்க முடியுமா அவரால்? சிரிக்க சிரிக்க பேசுவதாக நினைத்துவிடாதீர்கள். ரொம்ப சீரியஸான ஆளு நான். கட்சியாவது கிட்சியாவது என்று வெட்டி எறிந்துவிட்டு போய்கொண்டே இருப்பேன். வீரலட்சுமி யார் என்று ஒரு ஊடகம் கேட்கவில்ல. ஒரு காவல் துறை அதிகாரி கேட்கவில்லை. என்னை சிறையில் வைத்துவிட்டால், விஜயலட்சுமிக்கு நீதி கிடைத்துவிடுமா?” என்று ஆவேசமாக பேசினார்.
இந்தப் பேச்சுக்கு இணையதளத்தில் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் வலுத்து வருகிறது.
இதையும் படிக்க: நீங்களே அர்ச்சகர் வேலைய விட்டு வேற வேலைக்கு போயிட்டிங்க… அப்போ ஏன் குழத்தொழில் திட்டம்..? கேள்விகளால் திணறடித்த பி.டி.ஆர்..!
Discussion about this post