பர்ஸ் டைப்ல ஸ்மார்ட்போன்..!! இது என்ன புதுசா இருக்கு..?
ஹானர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய அப்டேட் :
வெகு நாள் இடைவேளைக்கு பின்பு இந்திய ஸ்மார்ட் போன் மார்கெட்டில் தற்போது ஹானர் நிறுவனம் ஒரு சூப்பரான ஸ்மார்ட் போனை களம் இருக்க உள்ளது.
இந்த போனின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இது போல்டபுல் கான்செப்ட் (foldable concept) ஆகும். அதன் பெயர் ஹானர் v பர்ஸ் (honor v purse).
இதனை பெர்லினில் நடைபெற்ற IFA 2023 கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் மற்றொரு சூப்பரான அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அது தான் ஹானர் நிறுவனத்தின் ஹானர் மேஜிக் v2 (honor magic v2).
ஹானர் v பர்ஸின் கான்செப்ட் ஆனது ஹுவாய் (huawei )யின் ஹுவாய் மேட் எக்ஸ்எஸ்( huawei matte xs ) மற்றும் ஹுவாய் மேட் எக்ஸ்எஸ் 2 ( huawei matte xs 2) வை விட மிகவும் மெல்லியதாக உள்ளது. ஹுவாய் டிஸ்பிலேவை விட 20% மெல்லியதாகவும், ஹானர் மேஜிக் v2 வில் 10.1% விட மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி இந்த ஹானர் v பர்ஸ் பெயர் வைக்க காரணம் அந்த போன் பெண்கள் உபயோகிக்கும் பர்ஸ்கள் போன்ற தோற்றத்தில் இருக்கும் மற்றும் அதில் செயின் போன்ற கைப்பிடி உள்ளது இதனால் அதனை பெண்கள் அணியும் கைப்பை ( handbag ) போன்றும் கொண்டு செல்லலாம்.
அதனுடன் வீகன் லெதர் ஸ்ட்ராப்கல் வருகிறது. குறிப்பாக பெண்கள் இதனை கொண்டு செல்லும் போது ஒரு போனை கொண்டு செல்வது போல் இல்லாமல் அழகான ஒரு பர்ஸை கொண்டு செல்வது போல் இருக்கும்.
இந்த அழகான போன் மார்க்கெட்டில் எப்போது வரும் என்ற தகவல் இன்னும் வெளியாக வில்லை. விரைவாகவே உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்று ஹானர் நிறுவனம் கூறியுள்ளது. இந்த போனின் வருகைக்கு பின்னால் கண்டிப்பாக பெண்களிடம் மிக பெரிய கலாச்சார வேறுபாடு இருக்கும் என்பது மட்டும் உறுதியாக உள்ளது.
Discussion about this post