சமூகத்தில் 3% உள்ள சாதியினர் (பார்ப்பனர்கள்) எப்படி அனைத்து அரசு பணிகளிலும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினார்கள்? என பி.டி.ஆர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த “இந்தியாவின் சமூகநீதி பெருவிழா” மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.,
“சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படாமல் உள்ளது. சமுதாயத்தை மாற்றுவதற்கு அரசு ரீதியாக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். பிராமணர்கள் மட்டும் அர்ச்சகர்களாக கருவறைக்குள் இருந்தார்கள். தற்போது திமுக ஆட்சி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” .
சமூகத்தில் எண்ணிக்கையில் வெறும் 3% உள்ள சாதியினர் எப்படி அனைத்து அரசு பணிகளிலும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினார்கள்? அவர்களே அர்ச்சகர் தொழிலை விட்டுவிட்டு சட்டம், மருத்துவம், அரசுப் பணிகள் உள்ளிட்ட பிற உயரிய பணிகளுக்கு சென்ற பின்னர், பிற சமூகத்தினர் மட்டும் எப்படி குல தொழிலை தொடர்ந்து பின்பற்ற முடியும்? . மேலும், இதன்படி குல தொழிலை ஒழிப்பதற்கு அவர்களே நமக்கு பாதையை காண்பித்துள்ளார்கள் என பேசினார்.
Discussion about this post